ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது கஹான் ஷுரு கஹான் கதம் திரைப்படம்

ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது கஹான் ஷுரு கஹான் கதம் திரைப்படம்

பாலிவுட்டில் காதல் மற்றும் நகைச்சுவை கலந்த குடும்பத் திரைப்படமாக வெளியான 'கஹான் ஷுரு கஹான் கதம்', தற்போது ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ஸ்ட்ரீமிங் ஆகத் தொடங்கியுள்ளது. இதனை ஜியோஹாட்ஸ்டார் நிர்வாகம் எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. த்வனி பானுஷாலி மற்றும் ஆஷிம் குலாட்டி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில், எதிர்பாராத திருமணச் சூழலில் சிக்கிக் கொள்ளும் இருவரின் வேடிக்கையான பயணமும் காதலும் கலகலப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியான போது குடும்ப ரசிகர்களைக் கவர்ந்த இந்த ரொமாண்டிக் காமெடி படம், தற்போது வார இறுதி நாட்களில் ரசித்து மகிழ ஓடிடி ரசிகர்களுக்கான நல்ல தேர்வாக அமைந்துள்ளது.

· Jiohotstar

பழைய செய்திகள்