கலையரசன் மற்றும் ஆனந்தி நடித்த 'டைட்டானிக்' திரைப்படம் நவம்பர் 13 அன்று திரையரங்குகளில் ரிலீஸ்!

கலையரசன் மற்றும் ஆனந்தி நடித்த 'டைட்டானிக்' திரைப்படம் நவம்பர் 13 அன்று திரையரங்குகளில் ரிலீஸ்!

நடிகர் கலையரசன் மற்றும் 'கயல்' ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள கலகலப்பான ரொமாண்டிக் காமெடி திரைப்படமான 'டைட்டானிக்', வரும் நவம்பர் 13 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளார். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி. குமார் தயாரித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே நீண்ட நாட்களாகக் காத்திருப்பில் இருந்தது. ஜானகிராமன் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்தப் படத்தில் ஆஷ்னா சவேரி, காளி வெங்கட், மதுமிதா மற்றும் ராகவ் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் கலகலப்பூட்டுகின்றனர். நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் ஏற்கெனவே கவனம் ஈர்த்துள்ள நிலையில், நகைச்சுவையும் காதலும் கலந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு அனுபவமாக இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இறுதிப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, நவம்பர் 13 அன்று திரையரங்குகளில் களம் காணத் தயாராகிவிட்டது. திரையரங்குகளில் ரசிகர்களைச் சிரிக்க வைக்க வரும் கலையரசன் மற்றும் ஆனந்தியின் இந்த ரொமாண்டிக் பயணம் எத்தகைய வரவேற்பைப் பெறுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

· Nikil Murukan

பழைய செய்திகள்