கலையரசன், ஆனந்தி நடித்துள்ள 'டைட்டானிக்': நவம்பர் 13 திரையரங்குகளில் ரிலீஸ்!
திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படமான 'டைட்டானிக்' வரும் நவம்பர் 13 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராகிவிட்டது. கொஞ்சம் காதல், கொஞ்சம் காமெடி, கொஞ்சம் உணர்வுகள் மற்றும் ரொமான்ஸ் நிறைந்த முழுமையான பொழுதுபோக்குப் படமாக இது உருவாகியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ஜானகிராமன் இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் கலையரசன், ஆனந்தி, காளி வெங்கட், மதுமிதா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். அட்டகத்தி மற்றும் பீட்சா உள்ளிட்ட பல புதுமையான திரைப்படங்களைத் தயாரித்த சி.வி.குமாரின் தயாரிப்பு என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நீடிக்கிறது. இப்படத்தின் சுவாரசியமான பாடல்களும் முன்னோட்டக் காட்சிகளும் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நீண்ட நாட்களாகக் காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், திரையரங்குகளில் சிரிப்பு மழையைப் பொழிய வரும் 'டைட்டானிக்' திரைப்படம் வரும் புதன்கிழமை நவம்பர் 13 அன்று உலகமெங்கும் உள்ள வெள்ளித்திரைக்கு வருகிறது.
· Actor Kayal Devaraj