கலையரசன், ஆனந்தி நடித்துள்ள டைட்டானிக்: அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கலையரசன் மற்றும் ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள டைட்டானிக் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. சினிமா எக்ஸ்பிரஸ் ஊடகம் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த செய்தி குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை வெளியிட்டுள்ளது. சி.வி. குமார் தயாரிப்பில், ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த நகைச்சுவை கலந்த காதல் திரைப்படத்தில் அஷ்னா சவேரி, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படம் தற்போது இறுதிகட்ட பணிகளை முடித்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இளசுகளை கவரும் காதல் மற்றும் நகைச்சுவை விருந்தாக திரைக்கு வரவுள்ள டைட்டானிக் படத்தின் புதிய ட்ரெய்லர் மற்றும் ப்ரோமோக்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. படத்தின் ரிலீஸ் தேதியைத் தொடர்ந்து ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
· @xpresscinema