கலையரசன், ஆனந்தி நடித்துள்ள 'டைட்டானிக்': நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் ரிலீஸ்

கலையரசன், ஆனந்தி நடித்துள்ள 'டைட்டானிக்': நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் ரிலீஸ்

பிரபல தயாரிப்பாளர் சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள 'டைட்டானிக்' திரைப்படம் வரும் நவம்பர் 13 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இத்தகவலை முன்னணி சினிமா மக்கள் தொடர்பாளர் டயமண்ட் பாபு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கலையரசன், ஆனந்தி, காளி வெங்கட், மதுமிதா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொஞ்சம் காதல், கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சென்டிமென்ட், கொஞ்சம் ரொமான்ஸ் என அனைத்து அம்சங்களும் கலந்த முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக இது திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு இக்னேஷியஸ் அஸ்வின் இசையமைத்துள்ளார். அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் போன்ற தரமான வெற்றிப் படங்களைத் தந்த திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. நவம்பர் 13 அன்று வெள்ளித்திரைக்கு வரும் 'டைட்டானிக்', குடும்ப ரசிகர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு சிறந்த திரையரங்க விருந்தாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

· Idiamondbabu

பழைய செய்திகள்