கலையரசன் - ஆனந்தி நடிப்பில் உருவான 'டைட்டானிக்' திரைப்படம்: நவம்பர் 13 திரையரங்குகளில் ரிலீஸ்!

கலையரசன் - ஆனந்தி நடிப்பில் உருவான 'டைட்டானிக்' திரைப்படம்: நவம்பர் 13 திரையரங்குகளில் ரிலீஸ்!

பிரபல மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தனது எக்ஸ் தளத்தில், தீபாவளி நல்வாழ்த்துகளோடு 'டைட்டானிக்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம் வரும் நவம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட், மதுமிதா மற்றும் ராகவ் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளோடு கலகலப்பான பொழுதுபோக்கு திரைப்படமாக இது தயாராகியுள்ளது. இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்க, பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். நீண்ட நாட்களாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படம் தீபாவளி பண்டிகைக்குப் பிந்தைய வாரத்தில் திரையரங்குகளில் களம் இறங்குகிறது. குடும்பத்தோடு திரையரங்கிற்கு வந்து கண்டுகளிக்கக்கூடிய ஒரு கலகலப்பான காமெடி விருந்தாக 'டைட்டானிக்' அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

· Nikil Murukan

பழைய செய்திகள்