கலையரசன், ஆனந்தி நடிப்பில் 'டைட்டானிக்': அக்டோபர் 16 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ்!

கலையரசன், ஆனந்தி நடிப்பில் 'டைட்டானிக்': அக்டோபர் 16 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ்!

தயாரிப்பாளர் சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள 'டைட்டானிக்' திரைப்படம் வரும் அக்டோபர் 16 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பிரபல மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இந்த ரிலீஸ் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். காதல் மற்றும் கலகலப்பு நிறைந்த முழுமையான பொழுதுபோக்கு விருந்தாக இப்படம் அமையும் என்று படக்குழு உற்சாகமாகத் தெரிவித்துள்ளது. ஜானகிராமன் இயக்கியுள்ள இப்படத்தில் கலையரசன் மற்றும் 'கயல்' ஆனந்தி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆஷ்னா சவேரி, காளி வெங்கட், மதுமிதா மற்றும் ராகவ் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள பாடல்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. காதல் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு நகரும் இக்கதைக்களம், ரசிகர்களுக்கு ஒரு ஜாலியான திரை அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக ரிலீசுக்காகக் காத்திருந்த இப்படம் அக்டோபர் 16 முதல் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரசிகர்களைச் சிரிக்க வைக்க வருகிறது.

· Nikil Murukan

பழைய செய்திகள்