மீண்டும் திரையரங்குகளில் கமல் காட்டிய 10 அவதாரங்கள்: நவம்பர் 28ல் தசாவதாரம் ரீ ரிலீஸ்!
உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றான தசாவதாரம் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சுதீக்ஷா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை வரும் நவம்பர் 28 ஆம் தேதி திரையரங்குகளில் மறுவெளியீடு செய்கிறது. இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கமல்ஹாசன் பூவராகவன், ஜார்ஜ் புஷ், பலராம் நாயுடு, வின்சென்ட் பூவராகன் என பத்து முற்றிலும் மாறுபட்ட அவதாரங்களில் தோன்றி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அறிவியல், வரலாறு, சமூகம் என அனைத்தையும் நேர்த்தியாக இணைத்த திரைக்கதையும் ஹிமேஷ் ரேஷமியா மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையும் இப்படத்திற்கு பெரும் தூணாக அமைந்தன. தற்கால நவீன டிஜிட்டல் மெருகூட்டலுடன் இத்திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளதால் அன்றைய தலைமுறையினர் மட்டுமின்றி இன்றைய இளம் சினிமா ரசிகர்களும் இதனைப் பெரிய திரையில் பார்க்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். நவம்பர் 28 அன்று திரையரங்குகளில் கமல் ரசிகர்களின் உற்சாக கொண்டாட்டம் களைகட்டும் என்பதில் ஐயமில்லை.
· Ursvamsishekar