காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஹே ராம் படத்தை நினைவுகூர்ந்த ராஜ்கமல் பிலிம்ஸ்
காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு உலகநாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், அவரது இயக்கத்தில் உருவான உலகப் புகழ்பெற்ற திரைப்படமான ஹே ராம் குறித்து சிறப்புப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அத்துடன் முழு திரைப்படத்தையும் தங்களது அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் ரசிகர்கள் இலவசமாகப் பார்க்கும் வசதியையும் பகிர்ந்துள்ளது. பிரிவினையின் போது மனித மனங்களில் எழும் வெறுப்புணர்வை விட அமைதியையும் அகிம்சையையும் தேர்ந்தெடுப்பது எவ்வளவு உன்னதமானது என்பதை ஹே ராம் திரைப்படம் ஆழமாகப் பேசியுள்ளது. கமல்ஹாசன், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், ராணி முகர்ஜி, நசிருதீன் ஷா மற்றும் அதுல் குல்கர்னி ஆகியோர் இணைந்து நடித்த இப்படம் இந்தியத் திரை வரலாற்றின் மிகச் சிறந்த அரசியல் மற்றும் வரலாற்றுப் படைப்புகளில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. இசைஞானி இளையராஜாவின் காலத்தால் அழியாத ஆன்மார்த்தமான இசை மற்றும் திருவின் நுட்பமான ஒளிப்பதிவில் உருவாகியிருந்த இந்த மாபெரும் திரைப்படத்தைக் காந்தி ஜெயந்தி நாளில் மீண்டும் யூடியூபில் கண்டு ரசிப்பதில் திரைப்பட ஆர்வலர்கள் பெரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
· Rkfi