35 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கமல், மணிரத்னம் கூட்டணி: KH234 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

35 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கமல், மணிரத்னம் கூட்டணி: KH234 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாயகன் திரைப்படத்திற்குப் பிறகு சுமார் 35 ஆண்டுகள் கழித்து உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்திற்காக கைகோர்த்துள்ளனர். 'KH234' என்ற தற்காலிக பெயரிடப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பை மணிரத்னம் எழுதி இயக்குகிறார் என்ற தகவலை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய மூன்று முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இந்திய சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்கள் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இணைவது சினிமா வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர நடிகர்கள் தேர்வு குறித்த விவரங்கள் விரைவில் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Red Giant Movies

பழைய செய்திகள்