கமல், மணிரத்னம் கூட்டணியின் தக் லைஃப்: ஜூன் 5-ல் ரிலீஸ் என ராஜ்கமல் நிறுவனம் அறிவிப்பு!

கமல், மணிரத்னம் கூட்டணியின் தக் லைஃப்: ஜூன் 5-ல் ரிலீஸ் என ராஜ்கமல் நிறுவனம் அறிவிப்பு!

உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் 'தக் லைஃப்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் புதிய வீடியோவோடு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஜூன் 5 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் கமல்ஹாசனுடன் சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா, அசோக் செல்வன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க 'நாயகன்' திரைப்படத்திற்குப் பிறகு மூன்று தசாப்தங்கள் கழித்து கமல் மற்றும் மணிரத்னம் இணையும் படம் என்பதால், உலகெங்கும் உள்ள சினிமா பிரியர்களிடையே தக் லைஃப் மீதான எதிர்பார்ப்பு இமயத்தைத் தொட்டுள்ளது. ஜூன் 5 ரிலீஸ் தேதியை ரசிகர்கள் இப்போதே சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடிக்கும் இந்த மல்டிஸ்டாரர் ஆக்‌ஷன் திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.

· Itsnarain

பழைய செய்திகள்