விஜய் சேதுபதியின் 'பத்தா' படத்தை நேரில் பாராட்டிய கமல்ஹாசன்: நெகிழ்ச்சியில் இயக்குநர் பாலாஜி தரணிதரன் குழுவினர்!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'பத்தா' திரைப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் நேரில் பார்த்து மனதாரப் பாராட்டியுள்ளார். இந்திய சினிமாவின் ஒப்பற்ற மேதையான கமல்ஹாசன் அருகில் நின்று அவரது வாழ்த்துரைகளைக் கேட்ட தருணம் தங்களுக்கு வாழ்நாள் பெருமை என்று படக்குழு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' மற்றும் 'சீதக்காதி' படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் வந்துள்ள இப்படம், மனித உணர்வுகளையும் மெல்லிய நகைச்சுவையையும் அழகாகப் பேசியுள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தீவிர சினிமா ரசிகர்களிடையே இப்படத்திற்குத் தொடர்ச்சியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கமல்ஹாசனின் இந்த மனமார்ந்த பாராட்டு படக்குழுவினருக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இணையதளங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
· Actor Kayal Devaraj