40 ஆண்டுகளை நிறைவு செய்த புன்னகை மன்னன்: கமல்ஹாசன் பாலசந்தர் கூட்டணியின் மறக்க முடியாத காதல் காவியம்!

40 ஆண்டுகளை நிறைவு செய்த புன்னகை மன்னன்: கமல்ஹாசன் பாலசந்தர் கூட்டணியின் மறக்க முடியாத காதல் காவியம்!

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், ரேவதி மற்றும் ரேகா நடிப்பில் கடந்த 1986 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று தீபாவளி திருநாளில் வெளியான புன்னகை மன்னன் திரைப்படம் இன்றுடன் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இசைஞானி இளையராஜாவின் நவீன மேற்கத்திய இசைக் கோர்ப்புகள் மற்றும் கமல்ஹாசன் அமைத்த மாயாஜால நடன அசைவுகள் அப்படத்தை காலத்தைக் கடந்த கலைப்படைப்பாக மாற்றின. சாப்ளின் செல்லப்பா என்ற நகைச்சுவை வேடம், காதல் தோல்வியின் வலி, புதிய வாழ்வை நோக்கிய நம்பிக்கை எனப் படம் முழுவதும் ரசிகர்களை கட்டிப்போடும் காட்சிகளால் நிறைந்திருந்தது. விபத்தில் காதலி மறைய, தற்கொலை முயற்சியில் தப்பிப் பிழைக்கும் நாயகனின் கதைக்களம் தமிழ் திரையுலகில் ஒரு புதிய அலையை உருவாக்கியது. நாற்பது ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றும் புன்னகை மன்னன் பாடல்களும் அதன் காலத்தால் அழியாத காட்சிகளும் இளைய தலைமுறை திரைப்பட ஆர்வலர்களால் வியந்து பாராட்டப்பட்டு வருவது இக்காவியத்தின் தனிப்பெரும் வெற்றியாகும்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்