கமல் ஹாசன் - ஷங்கர் கூட்டணியின் 'இந்தியன் 3': போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை உறுதி செய்த படக்குழு!
உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 3' திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள் அதிகாரப்பூர்வமாக வேகம் எடுத்துள்ளன. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முறைப்படி தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். சுதந்திர போராட்ட வீரர் வீரசேகரன் சேனாபதியின் முந்தைய கால வாழ்க்கை மற்றும் போர்க்களக் காட்சிகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் பெரும்பகுதி உருவாகிறது. காஜல் அகர்வால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களின் முக்கிய காட்சிகள் மூன்றாம் பாகத்தில் தான் பிரதானமாக இடம்பெறுகின்றன. இந்தியன் 2 படத்தின் இறுதியில் வெளியான முன்னோட்டமே ரசிகர்களிடம் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. அனிருத்தின் இசையில் மிக பிரம்மாண்டமான பீரியட் திரைப்படமாக தயாராகி வரும் 'இந்தியன் 3', உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தற்போது சிஜி மற்றும் எடிட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு திரைக்கு கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் தீவிரமாக திட்டமிட்டு வருகிறது.
· @xpresscinema