மே 15 அன்று விக்ரம் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீடு: ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மே 15 அன்று விக்ரம் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீடு: ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ஆக்‌ஷன் திரைப்படமான ‘விக்ரம்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் மே 15 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ஏற்கனவே கமல் ஹாசன் பாடி ஆடிய முதல் சிங்கிள் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில், முழு ஆல்பம் மற்றும் ட்ரெய்லருக்கான எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக இந்த விழா நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

· Rkfi

பழைய செய்திகள்