மே 15 அன்று விக்ரம் இசை வெளியீட்டு விழா: அனிருத் பாடல்களுடன் பிரம்மாண்ட ஏற்பாடு!
கமல்ஹாசன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 15 அன்று சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள பாடல்கள் ரசிகர்களின் பிளேலிஸ்ட்டை அலங்கரிக்கத் தயாராகி வருகின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் இணைந்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர். கமல் எழுதி பாடியுள்ள பத்தல பத்தல பாடலும் இதில் இடம்பெற்றிருப்பது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இசை பிரியர்களுக்கு இது ஒரு சிறந்த இசை விருந்தாக அமையும். ஜூன் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகும் விக்ரம் படத்தின் அதிரடி டிரெய்லரும் இந்த இசை வெளியீட்டு விழாவின் போதே மேடையில் வெளியிடப்படும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· Turmericmediatm