திரையரங்குகளில் ஓயாத விக்ரம் புயல்: 5-வது வாரத்தில் வெற்றிகரமாக நுழைந்து சாதனை!
கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி இந்தியத் திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக தனது ஐந்தாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படம் உலகளவில் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து தமிழ் சினிமா வரலாற்றில் அனைத்து முந்தைய வசூல் சாதனைகளையும் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது. ஐந்தாவது வாரத்திலும் உலகம் முழுவதும் உள்ள பிரதான திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி மாபெரும் வசூல் வேகத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. கமல் ஹாசனின் அபார திரையாளுமை, ஃபஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதியின் அனல் பறக்கும் நடிப்பு, க்ளைமாக்ஸில் சூர்யாவின் அதிரடி ரோலக்ஸ் தோற்றம் ஆகியவை ரசிகர்களைத் திரும்பத் திரும்ப திரையரங்குகளுக்கு வரவழைத்து படத்திற்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளன. இதனால் திரையரங்க உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
· Rkfi