பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 படங்களுடன் திரையரங்குகளில் திரையிடப்படும் விக்ரம் முன்னோட்டம்!
திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போடும் பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 திரைப்படங்களின் இடைவேளையின் போது கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் கிளான்ஸ் டீசர் பிரம்மாண்ட திரைகளில் திரையிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு திரையரங்கு செல்லும் சினிமா ரசிகர்களுக்கு இரட்டிப்பு உற்சாகத்தை அளித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 50 நாட்களே உள்ள நிலையில், பெரிய திரையில் கமல்ஹாசனின் அதிரடி தோற்றத்தைக் காணும் அருமையான வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளது. அனிருத்தின் விறுவிறுப்பான பின்னணி இசையுடன் கூடிய இந்த டீசர் தியேட்டர்களில் ரசிகர்களின் கரகோஷத்தை அள்ளியுள்ளதுடன் இணையத்திலும் வைரலாகி வருகிறது. ஜூன் 3 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ள விக்ரம் திரைப்படத்தை வரவேற்க உலகெங்கிலும் உள்ள கமல் ரசிகர்கள் இப்போதே தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றனர். திரையரங்குகளில் இந்த டீசரை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
· Turmericmediatm