விக்ரம் படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமத்தை கைப்பற்றிய ஸ்டார் நெட்வொர்க்!
உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமங்களை முன்னணி நிறுவனமான ஸ்டார் குழுமம் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கைப்பற்றியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஜய் டிவி, ஸ்டார் மா, ஏசியாநெட் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் இந்த ஒளிபரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட திரைப்படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய வணிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தியேட்டர் வெளியீட்டிற்கு முன்பே விக்ரம் திரைப்படத்தின் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி உரிமங்கள் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகி வணிக ரீதியாக சாதனை படைத்தன. தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் பெரும் பலமாக அமைந்தது. ஜூன் 3 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகும் விக்ரம் திரைப்படம், திரையரங்க வெற்றிகரமான ஓட்டத்திற்குப் பின்னரே டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரை மற்றும் டிஜிட்டல் தளத்திலும் படம் மாபெரும் சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Turmericmediatm