வெளியானது விக்ரம் படத்தின் 'பத்தல பத்தல' வீடியோ பாடல்: கமல்ஹாசனின் குத்து டான்ஸ் கொண்டாட்டம்!
கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த விக்ரம் திரைப்படத்தின் சூப்பர் ஹிட் பாடலான 'பத்தல பத்தல' முழு வீடியோ பாடல் யூடியூப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. கமல் சொந்த குரலில் பாடி அசத்தலாக ஆடியுள்ள இந்த குத்து பாடல் ரசிகர்களை மீண்டும் ஒருமுறை நடனமாட வைத்துள்ளது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைப்பில் கமல்ஹாசனே சொந்த வரிகளில் எழுதி பாடிய இந்த பாடல், படம் ரிலீஸாவதற்கு முன்பே உலகம் முழுவதும் இணையத்தைக் கலக்கியது. தற்போது திரையரங்குகளில் மக்கள் ரசித்து பார்த்த முழு நடன வீடியோ காட்சியும் சோனி மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியானதால், சமூக வலைத்தளங்களில் இதனை ரசிகர்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர். கமல் மற்றும் அனிருத் காம்போ ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. சாண்டி மாஸ்டர் நடன அமைப்பில் கமல்ஹாசனின் அசாத்திய சுறுசுறுப்பும் ஸ்டைலான அசைவுகளும் பாடலின் ஒவ்வொரு பிரேமிலும் தனித்துவமாக வெளிப்பட்டு ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த பாடல் தொடர்ந்து பல மில்லியன் பார்வைகளைக் குவித்து வருகிறது.
· Turmericmediatm