தியேட்டர்களில் அதிர இன்னும் 25 நாட்களே: விக்ரம் கவுண்ட்டவுன் வீடியோ வெளியீடு!

தியேட்டர்களில் அதிர இன்னும் 25 நாட்களே: விக்ரம் கவுண்ட்டவுன் வீடியோ வெளியீடு!

உலகநாயகன் கமல் ஹாசனின் அதிரடி திரைப்படமான ‘விக்ரம்’ உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இன்னும் சரியாக 25 நாட்களே உள்ளன என்பதை நினைவூட்டும் வகையில், தயாரிப்பு நிறுவனம் சிறப்பு கவுண்ட்டவுன் வீடியோவை வெளியிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி சர்வதேச அளவில் மிகப்பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. அனிருத்தின் தெறிக்கும் பின்னணி இசையுடன், கமல் ஹாசன் துப்பாக்கியுடன் தோன்றும் மாஸ் காட்சிகள் அடங்கிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்துள்ளதால், இந்த படத்தின் வெளியீட்டு நாளைக் காண சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் படத்தின் அட்வான்ஸ் புக்கிங் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

· Rkfi

பழைய செய்திகள்