'கன்னடத்துப் பைங்கிளி' படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் நிறைவு: விரைவில் ஃபர்ஸ்ட் லுக்!
கே. பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் டி. ராஜேந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ள 'கன்னடத்துப் பைங்கிளி' படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்தகவலை பிஆர்ஓ நிகில் முருகன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். சாய் ரமணி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் அமல்ஜித், ஆத்யா, சிங்கம்புலி, புகழ், ஆதவன் மற்றும் லொள்ளு சபா ஜீவா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் களம் இறங்கியுள்ளனர். அனைத்துப் பணிகளும் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிக விரைவில் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பாக்யராஜ் மற்றும் டி.ஆர் இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ் சினிமாவின் மூத்த திரை ஆளுமைகளான பாக்யராஜ் மற்றும் டி.ராஜேந்தர் கூட்டணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு சுவாரசியமான குடும்பக் கொண்டாட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Nikil Murukan