பாக்ஸ் ஆபிஸில் காந்தாரா சாப்டர் 1 மாபெரும் வசூல்: 400 கோடி கடந்து சாதனை!

பாக்ஸ் ஆபிஸில் காந்தாரா சாப்டர் 1 மாபெரும் வசூல்: 400 கோடி கடந்து சாதனை!

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள பிரம்மாண்ட படைப்பான 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது. இப்படம் திரையரங்குகளில் வசூல் வேட்டையைத் தொடர்வதாக சினிமா வர்த்தக ஆய்வாளர்கள் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதன் முன்கதையாக (Prequel) உருவான இப்படம் பழங்கால கடம்பா பேரரசு மற்றும் பூதக் கோல வழிபாட்டு பின்னணியை பிரம்மாண்டமாக விவரித்துள்ளது. ரிஷப் ஷெட்டியின் அசாத்திய உழைப்பும், ருக்மிணி வசந்தின் இயல்பான நடிப்பும் ரசிகர்களை திரையரங்குகளில் கட்டிப்போட்டுள்ளன. பான் இந்தியா அளவில் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய அனைத்து மொழிகளிலுமே இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குடும்ப ரசிகர்களின் பேராதரவோடு திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிநடை போடும் இப்படம் அடுத்தடுத்த நாட்களில் மேலும் பல வசூல் சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· @_movietamil

பழைய செய்திகள்