அமெரிக்காவில் காந்தாரா வசூல் வேட்டை: கேஜிஎஃப் வரிசைக்கு பின் அதிக வசூல் ஈட்டிய கன்னட படம்

அமெரிக்காவில் காந்தாரா வசூல் வேட்டை: கேஜிஎஃப் வரிசைக்கு பின் அதிக வசூல் ஈட்டிய கன்னட படம்

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த பிரம்மாண்ட படைப்பான காந்தாரா அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் வரலாறு காணாத வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. கேஜிஎஃப் திரைப்பட வரிசையைத் தவிர்த்து, அமெரிக்காவில் இதுவரை வெளியான கன்னட திரைப்படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படம் என்ற பெருமையை காந்தாரா பெற்றுள்ளதாக பிரைம் மீடியா அறிவித்துள்ளது. ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் பழங்குடி மக்களின் நில உரிமை, தெய்வ வழிபாடு மற்றும் மண்ணின் மரபுகளை மையமாக கொண்டு பார்வையாளர்களை மிரள வைத்தது. அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து படத்தை பார்த்து கொண்டாடினர். இரண்டாவது வாரத்தை வெற்றிகரமாக முடித்துள்ள காந்தாரா, மூன்றாவது வாரத்தில் மேலும் பல புதிய திரைகளில் விரிவடைகிறது. உலகளவில் கவனம் ஈர்த்துள்ள இந்த கலைப்படைப்பு வெளிநாடுகளிலும் தொடர்ந்து தன் வசூல் பயணத்தை நீட்டித்து வருகிறது.

· Primemediaus

பழைய செய்திகள்