மோத ராத்திரி படத்தைப் பாராட்டிய நடிகர் கார்த்தி: நெட்பிளிக்ஸ் தளத்தில் முதலிடம் பிடித்து சாதனை

மோத ராத்திரி படத்தைப் பாராட்டிய நடிகர் கார்த்தி: நெட்பிளிக்ஸ் தளத்தில் முதலிடம் பிடித்து சாதனை

திரையரங்குகளில் குடும்ப ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிபெற்ற 'மோத ராத்திரி' திரைப்படம், ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகி இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்து அசத்தி வருகிறது. இந்த நிலையில் முன்னணி நடிகர் கார்த்தி இப்படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரை மனதார பாராட்டியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவான இந்த தூய்மையான குடும்பத் திரைப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். பரத் சங்கரின் மெல்லிசையும், இயல்பான நகைச்சுவையும் நிறைந்த இத்திரைப்படத்தைப் பாராட்டிய கார்த்திக்கு படக்குழுவினர் தங்களது நெகிழ்ச்சியான நன்றியைத் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் பரவும் பாசிட்டிவான விமர்சனங்களால் நெட்பிளிக்ஸ் பார்வையாளர்களைத் தொடர்ந்து ஈர்த்து வரும் மோத ராத்திரி, ஓடிடி வெளியீட்டிலும் ப்ளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்