நாடற்ற இளவரசன், சாகச வீரன் வந்தியத்தேவனாக கார்த்தி: பொன்னியின் செல்வன் 1 மாஸ் போஸ்டர்!

நாடற்ற இளவரசன், சாகச வீரன் வந்தியத்தேவனாக கார்த்தி: பொன்னியின் செல்வன் 1 மாஸ் போஸ்டர்!

மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான 'பொன்னியின் செல்வன் 1' திரைப்படத்தில் இருந்து கார்த்தி நடித்துள்ள வந்தியத்தேவன் கதாபாத்திரத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டரை லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்டுள்ளது. 'நாடற்ற இளவரசன், ஒற்றன் மற்றும் துணிச்சல் மிக்க சாகச வீரன் வந்தியத்தேவன் இதோ' என்ற வர்ணனையுடன் இந்த போஸ்டர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. குதிரையின் மீது கம்பீரமாக அமர்ந்து புன்னகைக்கும் கார்த்தியின் தோற்றம், கல்கியின் நாவலில் வரும் வந்தியத்தேவனின் குணாதிசயங்களை அப்படியே திரையில் கண்முன்னே கொண்டுவந்துள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கார்த்தியின் கதாபாத்திரம் கதையை வழிநடத்தும் மிக முக்கிய தூணாக அமைந்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் பிரம்மாண்ட இசையில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. நாவலை வாசித்த வாசகர்கள் மற்றும் திரைப்பட ரசிகர்கள் என இருதரப்பினரையும் இந்த போஸ்டர் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

· Lyca Productions

பழைய செய்திகள்