கார்த்தியின் அதிரடி ஸ்பை த்ரில்லர் 'சர்தார் 2': திரையரங்குகளில் நடிகர்களின் அசத்தல் நடிப்பு

கார்த்தியின் அதிரடி ஸ்பை த்ரில்லர் 'சர்தார் 2': திரையரங்குகளில் நடிகர்களின் அசத்தல் நடிப்பு

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவான விறுவிறுப்பான உளவு த்ரில்லர் திரைப்படம் 'சர்தார் 2'. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் மற்றும் யோகி பாபு ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். சாம் சி.எஸ் பின்னணி இசை மற்றும் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு படத்தின் வேகத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. நடிகர்களின் பங்களிப்பை பாராட்டி தயாரிப்பு நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது. தேசப்பற்று மற்றும் சர்வதேச உளவு அரசியலை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அனைத்து திரையரங்குகளிலும் குடும்ப ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் படத்தின் வசூல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

· Prosathish

பழைய செய்திகள்