1995 காலகட்ட கிராமத்து பின்னணி: திரையரங்குகளில் வரவேற்பை பெறும் டோரதி!
பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'டோரதி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்று வெற்றிப் பாதையில் பயணிக்கிறது. 1995ஆம் ஆண்டின் கிராமத்து வாழ்க்கைப் பின்னணியில் நகரும் இக்கதைக்களத்தில், சாதிய முரண்கள், ஆணாதிக்கக் கட்டுப்பாடுகள் மற்றும் இரண்டு நண்பர்களுக்கு இடையிலான ஆழமான நட்பு ஆகியவை மிக தைரியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோரின் இயல்பான நடிப்பும், இசைஞானி இளையராஜாவின் உணர்ச்சிகரமான இசையும் இப்படத்தை மற்றொரு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. எவ்வித சமரசமும் இன்றி கிராமத்து எதார்த்தத்தை அப்படியே பதிவு செய்துள்ள விதம் சினிமா விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றுள்ளது. நல்ல சினிமாக்களைக் கொண்டாடும் தமிழ் ரசிகர்கள் டோரதி திரைப்படத்திற்கு திரையரங்குகளில் தொடர்ந்து பேராதரவு வழங்கி வருகின்றனர். குடும்பங்களுடனும் இளைஞர்களுடனும் தியேட்டர்களில் நல்லதொரு சினிமா அனுபவத்தை இப்படம் வழங்கி வருகிறது. தரமான கதையம்சம் கொண்ட சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கு தியேட்டர்களில் கிடைக்கும் இத்தகைய வரவேற்பு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
· Only Kollywood