நாயகியாக 13 ஆண்டுகளை நிறைவு செய்த கீர்த்தி சுரேஷ்: தென்னிந்திய திரையுலகில் 14வது ஆண்டில் உற்சாகப் பிரவேசம்!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக அறிமுகமாகி 13 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து 14வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இந்தத் திரையுலகப் பயணத்தை முன்னிட்டு நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் தளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால் நடித்த 'கீதாஞ்சலி' திரைப்படத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டு நவம்பர் 14 அன்று கதாநாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். தமிழில் 'இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமாகி, சிவகார்த்திகேயன், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநடி'யில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் அவர் வென்றார். தற்போது தமிழ், தெலுங்கு மட்டுமின்றி பாலிவுட்டிலும் அடுத்தடுத்த பெரிய படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு ரசிகர்களும் திரையுலகப் பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
· Actor Kayal Devaraj