ஆஸ்திரேலியாவில் கீர்த்தி சுரேஷின் டோரதி படத்திற்கு கூடுதல் திரைகள்: அஹிம்சா என்டர்டெயின்மென்ட் அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் கீர்த்தி சுரேஷின் டோரதி படத்திற்கு கூடுதல் திரைகள்: அஹிம்சா என்டர்டெயின்மென்ட் அறிவிப்பு

கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கார்த்திக் சுப்பராஜ் வழங்கியுள்ள 'டோரதி' திரைப்படத்திற்கு வெளிநாடுகளிலும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் சினிமா ரசிகர்கள் விடுத்த தொடர் கோரிக்கையை ஏற்று, அங்கு கூடுதல் திரையரங்குகளிலும் காட்சிகளிலும் டோரதி திரையிடப்படுவதாக வெளிநாட்டு விநியோக நிறுவனமான அஹிம்சா என்டர்டெயின்மென்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இசைஞானி இளையராஜாவின் மயக்கும் பின்னணி இசையிலும் திருவின் நேர்த்தியான ஒளிப்பதிவிலும் உருவாகியுள்ள இந்த த்ரில்லர் திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல பாராட்டுகளைப் பெற்றுள்ளது. புதிய திரைப்படங்கள் பல வெளியான பரபரப்பான வாரத்திலும் கூட, ரசிகர்களின் வரவேற்பைக் கண்டு ஆஸ்திரேலியா முழுவதும் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களிடையே நல்ல வர்த்தகத்தை ஈட்டி வரும் டோரதி படத்திற்கு இப்போதும் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷின் மாறுபட்ட நடிப்பு பலரையும் கவர்ந்துள்ள நிலையில், இந்த வார இறுதி வசூலும் பெரும் உயர்வை எட்டும் என கணிக்கப்படுகிறது.

· @_movietamil

பழைய செய்திகள்