படப்பிடிப்பு தளத்தில் சாவித்திரியாக கலக்கும் கீர்த்தி சுரேஷ்: 'சத்யவான் சாவித்திரி' ஜாலி பிடிஎஸ் வீடியோ வெளியீடு!

படப்பிடிப்பு தளத்தில் சாவித்திரியாக கலக்கும் கீர்த்தி சுரேஷ்: 'சத்யவான் சாவித்திரி' ஜாலி பிடிஎஸ் வீடியோ வெளியீடு!

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'சத்யவான் சாவித்திரி' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட கலகலப்பான பிஹைண்ட் தி சீன்ஸ் (BTS) வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சாவித்திரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், படப்பிடிப்பின் போது சக கலைஞர்களுடன் ஜாலியாக அரட்டையடிக்கும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. பிரவீன் எஸ் விஜய் இயக்கத்தில், டிரமஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சாம் சி.எஸ் இசையமைப்பில் உருவாகியுள்ள பாடல்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த சுவாரசியமான வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் 'சத்யவான் சாவித்திரி' திரைப்படம் வரும் நவம்பர் 20-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. கீர்த்தி சுரேஷின் மாறுபட்ட நடிப்பையும் மிஷ்கினின் திரைப் பிரசன்னத்தையும் பெரிய திரையில் காண ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்