கீர்த்தி சுரேஷின் 'சத்யவான் சாவித்திரி': இன்னும் 4 நாட்களில் திரையரங்குகளில் ரிலீஸ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ள 'சத்யவான் சாவித்திரி' திரைப்படம் வரும் நவம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படம் திரைக்கு வர இன்னும் நான்கு நாட்களே இருப்பதாக நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் சுவாரசியமான கவுண்ட்டவுன் போஸ்டருடன் நினைவூட்டியுள்ளார். இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில் ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் புதுமையான சட்டப் போராட்டம் மையக்கதையாக அமைந்துள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இக்கதையில் கீர்த்தி சுரேஷின் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் மாறுபட்ட நடிப்பு ரசிகர்களை பெரிதும் ஈர்க்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. நீதிமன்றக் களத்தில் நேருக்கு நேர் நடக்கும் விறுவிறுப்பான வாதப் பிரதிவாதங்களுடன் உருவாகியுள்ள இப்படம் வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 20 முதல் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
· Actor Kayal Devaraj