கீர்த்தி சுரேஷின் சத்யவான் சாவித்திரி படத்தின் ரிப்பிப்பீ பாடல் வெளியானது: நவம்பர் 20 ரிலீஸ்!

கீர்த்தி சுரேஷின் சத்யவான் சாவித்திரி படத்தின் ரிப்பிப்பீ பாடல் வெளியானது: நவம்பர் 20 ரிலீஸ்!

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரபல இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள சத்யவான் சாவித்திரி திரைப்படத்திலிருந்து ரிப்பிப்பீ என்ற தெலுங்கு பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. திருமண கொண்டாட்டப் பாடலாக உருவாகியுள்ள இப்பாடல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரவீன் எஸ் விஜய் இயக்கியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் துள்ளலான இசையமைத்துள்ளார். இப்பாடலை பாடகர்கள் பத்மலதா மற்றும் ஜோன்ஸ் இணைந்து பாடியுள்ளனர். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஷில்பா மஞ்சுநாத், பாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் வரும் நவம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. திருமண பின்னணியில் கலகலப்பான கதையமைப்போடு உருவாகியுள்ள இப்பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்