அட்வகேட் சாவித்திரியாக வரும் கீர்த்தி சுரேஷ்: 'சத்தியவான் சாவித்திரி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சத்தியவான் சாவித்திரி' திரைப்படம் வரும் நவம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. தீபாவளி திருநாளை முன்னிட்டு இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள வழக்கறிஞர் சாவித்திரி கதாபாத்திரத்தின் சிறப்பு முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் மிஷ்கின் வழங்கும் இப்படத்தை பிரவீன் எஸ் விஜய் இயக்கியுள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தை டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில் பாலா, விஜி சந்திரசேகர், ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வழக்கறிஞர் உடையில் கம்பீரமாகத் தோன்றும் கீர்த்தி சுரேஷின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நீதிமன்றப் பின்னணியில் சுவாரசியமான திருப்பங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தின் புரோமோ வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பெண்களை மையமாகக் கொண்ட அழுத்தமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் கீர்த்தி சுரேஷின் 'சத்தியவான் சாவித்திரி' வரும் நவம்பர் 20 முதல் வெள்ளித்திரையில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வருகிறது.
· Actor Kayal Devaraj