கேஜிஎஃப் 2 சிங்கப்பூர் மற்றும் வளைகுடா விநியோக உரிமையைக் கைப்பற்றிய ஏபி இன்டர்நேஷனல்
கன்னட சினிமாவின் உச்ச நட்சத்திரமான யாஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகியுள்ள 'கேஜிஎஃப் சேப்டர் 2' திரைப்படத்தின் சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளின் திரையரங்கு விநியோக உரிமையை ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் முறைப்படி கைப்பற்றியுள்ளது. தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிநாடுகளில் இப்படத்தை ஏபி இன்டர்நேஷனல் பிரம்மாண்டமான முறையில் வெளியிட உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய வர்த்தக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இரண்டாம் பாகத்திற்கு உலகளவில் கடும் போட்டி நிலவி வந்தது. சஞ்சய் தத் மற்றும் ரவீனா டாண்டன் போன்ற பாலிவுட் பிரபலங்களும் முக்கிய வேடங்களில் களமிறங்குவதால் சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளில் திரையிடல்களுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 14 வெளியீட்டை முன்னிட்டு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டு முன்பதிவுகள் தொடங்கப்பட்டு வருகின்றன.
· Apifilms