சிங்கப்பூரில் 'கே.ஜி.எஃப் 1' மற்றும் 'கே.ஜி.எஃப் 2' பேக் டு பேக் சிறப்பு காட்சி: ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!

சிங்கப்பூரில் 'கே.ஜி.எஃப் 1' மற்றும் 'கே.ஜி.எஃப் 2' பேக் டு பேக் சிறப்பு காட்சி: ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய இந்திய சினிமாவின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களான 'கே.ஜி.எஃப் சாப்டர் 1' மற்றும் 'கே.ஜி.எஃப் சாப்டர் 2' ஆகிய இரண்டு பாகங்களையும் ஒரே மேடையில் அடுத்தடுத்து காணும் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள கார்னிவல் சினிமாஸில் ஏப்ரல் 24 அன்று மாலை 7 மணிக்கு இந்த மெகா காட்சி நடைபெறவுள்ளதாக ஏபி இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது. ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் ரவி பஸ்ரூர் இசையமைப்பில் உருவான கே.ஜி.எஃப் திரைப்படம், இந்திய அளவில் வசூல் சாதனைகளைத் தகர்த்தெறிந்து உலகப் புகழ்பெற்றது. சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் மிரட்டிய இரண்டாம் பாகத்தின் விறுவிறுப்பை முதல் பாகத்தோடு சேர்த்து ஒரே மூச்சில் திரையரங்கில் பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிங்கப்பூர் வாழ் சினிமா பிரியர்கள் மற்றும் யாஷ் ரசிகர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்து வருகின்றனர். இரண்டு பாகங்களின் அனல் பறக்கும் காட்சிகளையும், அதிரடி சண்டைகளையும் பெரிய திரையில் மீண்டும் கொண்டாடும் இந்த சிறப்பு நிகழ்வு ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையும்.

· Apifilms

பழைய செய்திகள்