யுஏஇ தணிக்கையை நிறைவு செய்தது கேஜிஎஃப் 2: ஏப்ரல் 14 வெளியீட்டுக்குத் தயார்

யுஏஇ தணிக்கையை நிறைவு செய்தது கேஜிஎஃப் 2: ஏப்ரல் 14 வெளியீட்டுக்குத் தயார்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படைப்பான 'கேஜிஎஃப் சேப்டர் 2' திரைப்படம், ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) தணிக்கைச் சான்றிதழைப் பெற்றுள்ளதாக வெளிநாட்டு விநியோக உரிமையைப் பெற்றுள்ள ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இப்படத்திற்கு யுஏஇ தணிக்கைக் குழு 'PG 15' சான்றிதழ் வழங்கியுள்ளது. பாலிவுட் நட்சத்திரங்கள் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் என முன்னணி நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ள இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் அதிரடி இசையமைத்துள்ளார். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இப்படம் உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. திரையரங்குகளில் வரும் ஏப்ரல் 14 அன்று உலகம் முழுவதும் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கேஜிஎஃப் 2 வெளியாகிறது. வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. ராக்கி பாயின் ஆக்ஷன் திருவிழாவைக் காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

· Apifilms

பழைய செய்திகள்