கிங் நாகார்ஜுனாவின் 100வது படம்: தபுவின் மிரட்டலான மகான்தி ஜான்சி ராணி க்ளிம்ப்ஸ் வெளியானது!

கிங் நாகார்ஜுனாவின் 100வது படம்: தபுவின் மிரட்டலான மகான்தி ஜான்சி ராணி க்ளிம்ப்ஸ் வெளியானது!

டோலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான கிங் நாகார்ஜுனாவின் 100வது திரைப்படமான கிங் 100 படத்திலிருந்து, நடிகை தபுவின் பிறந்தநாளையொட்டி சிறப்பு க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மூவி தமிழ் உள்ளிட்ட சினிமா பக்கங்களில் இந்த வீடியோ தற்போது வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இப்படத்தில் தபு மகான்தி ஜான்சி ராணி என்கிற கம்பீரமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெலுங்கில் நாகார்ஜுனா மற்றும் தபு ஜோடியாக நடித்த நின்னே பெல்லடாதா பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று 28 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இருவரும் மீண்டும் ஒரே திரையில் இணைந்திருப்பது ரசிகர்களைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெளியான முன்னோட்ட காட்சியில் தபுவின் தோற்றமும் நடிப்பும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. நாகார்ஜுனாவின் சினிமா பயணத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம், வரும் டிசம்பர் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

· @_movietamil

பழைய செய்திகள்