கிரண் அப்பாவரத்தின் 'ரியாலிட்டி': வைக்கம் விஜயலட்சுமி பாடிய 'பஜ கோவிந்தம்' பாடல் வெளியீடு!
கிரண் அப்பாவரம் நடிப்பில் உருவாகியுள்ள 'ரியாலிட்டி' திரைப்படத்தின் முதல் பாடலான 'பஜ கோவிந்தம்' லிரிக்கல் வீடியோ எக்ஸ் மற்றும் யூடியூப் தளங்களில் வெளியாகியுள்ளது. வாழ்க்கையின் எளிய மகிழ்ச்சியையும் மன நிறைவையும் போற்றும் தத்துவப் பாடலாக உருவாகியுள்ள இந்த பாடல் இசை ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது. பீம்ஸ் சிசிரோலியோ இசையமைத்துள்ள இந்த மெலடி பாடலை சனாரே எழுதியுள்ளார். தனது வசீகரமான தனித்துவ குரலால் ரசிகர்களை கட்டிப்போடும் பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி இப்பாடலை பாடியுள்ளார். தேவிகா பட் கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்தை கிரண் அப்பாவரமே எழுதி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 25 அன்று உலகம் முழுவதும் 'ரியாலிட்டி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் பாடலின் இனிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ள நிலையில், அடுத்தடுத்த பாடல்கள் விரைவில் வெளிவரவுள்ளன.
· Ursvamsishekar