தயாரிப்பாளராகக் களமிறங்கும் மேனேஜர்: வாழ்த்தி மகிழ்ந்த நடிகர் கிரண் அப்பாவரம்!
இளம் தெலுங்கு முன்னணி நடிகர் கிரண் அப்பாவரம், தயாரிப்பாளராகத் தனது புதிய திரைப் பயணத்தைத் தொடங்கும் மேனேஜர் சவானுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதாக சினிமா பிஆர்ஓ வம்சி சேகர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 'லீஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்' (Least Eligible Bachelor) என்ற புதிய திரைப்படத்தின் மூலம் சவான் தயாரிப்பாளராகக் களமிறங்குகிறார். திரையுலகில் தனது சினிமா வளர்ச்சிக்குத் தொடக்கம் முதல் தோளோடு தோள் நின்ற மேனேஜரின் தயாரிப்பு முயற்சிக்கு கிரண் அப்பாவரம் ஆதரவு தந்து நெகிழ்ச்சியுடன் வாழ்த்தியிருப்பது டோலிவுட் வட்டாரத்தில் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. நட்பும் மரியாதையும் நிறைந்த இந்த செயல் திரையுலகில் ஆரோக்கியமான முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது. இன்றைய தலைமுறை இளைஞர்களின் காதல் மற்றும் திருமண எதிர்பார்ப்புகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'லீஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்' திரைப்படம், வரும் அக்டோபர் 9ஆம் தேதி முதல் பிரபல ஓடிடி தளமான ஈடிவி வின் (ETV Win) தளத்தில் நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.
· Ursvamsishekar