கிஷோர் ராஜ்குமார் இயக்கி நடிக்கும் 'கோயம்புத்தூர் மாப்பிள்ளை': ரிலீஸ் தேதி அறிவிப்பு!
'நாய் சேகர்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி வெற்றி கண்ட கிஷோர் ராஜ்குமார், தற்போது 'கோயம்புத்தூர் மாப்பிள்ளை' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கிஷோர் ராஜ்குமாருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார். நகைச்சுவை மற்றும் குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த பொழுதுபோக்குப் படம் ரசிகர்களுக்கு முழுமையான கொண்டாட்டத்தை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மற்றும் கதாநாயகன் என இரண்டு பொறுப்புகளையும் சுமந்துள்ள கிஷோர் ராஜ்குமாரின் இந்த புதிய முயற்சிக்குத் திரை உலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
· @xpresscinema