கோலிவுட்டில் மீண்டும் பார்ட் 3 சீசன்: 'தமிழ்படம் 3', 'சென்னை 28 பார்ட் 3' படப்பிடிப்பு தொடக்கம்!
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 'பார்ட் 3' சீக்வல் சீசன் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கோலிவுட் வட்டாரத்தில் தற்போது பரவலாகப் பேசப்பட்டு வரும் இந்த சுவாரசியமான தகவல் சினிமா பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் உருவாகும் 'தமிழ்படம் 3' படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்தில் முறைப்படி தொடங்கியுள்ளது. இதேபோல், இயக்குநர் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான கூட்டணியில் உருவாகும் 'சென்னை 600028 பார்ட் 3' படத்தின் படப்பிடிப்பும் இதே மாதத்தில் தொடங்குகிறது. இரண்டு படங்களிலுமே சிவா முக்கிய பங்களிப்பு செய்வது கூடுதல் சிறப்பம்சமாகும். இதற்கு முன்னதாக சூர்யாவின் 'சிங்கம் 3' மற்றும் லாரன்ஸின் 'காஞ்சனா 3' போன்ற படங்கள் வந்திருந்த நிலையில், இந்த ஆண்டு 'டிமான்ட்டி காலனி 3' படமும் வெளியாகவுள்ளது. வரிசையாக பார்ட் 3 படங்கள் அணிவகுத்து நிற்பதால் திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· @_movietamil