அமல் நீரத்தின் 'பேச்சிலர் பார்ட்டி டியூக்ஸ்': தீரஜ் பிரபுவாக களமிறங்கும் குஞ்சாக்கோ போபன்

அமல் நீரத்தின் 'பேச்சிலர் பார்ட்டி டியூக்ஸ்': தீரஜ் பிரபுவாக களமிறங்கும் குஞ்சாக்கோ போபன்

பிரபல மலையாள இயக்குநர் அமல் நீரத் இயக்கும் மல்டிஸ்டாரர் படமான 'பேச்சிலர் பார்ட்டி டியூக்ஸ்' திரைப்படத்தில், முன்னணி நடிகர் குஞ்சாக்கோ போபன் 'தீரஜ் பிரபு' என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக சோனி மியூசிக் சவுத் நிறுவனம் புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அன்வர் ரஷீத் என்டர்டெயின்மென்ட் மற்றும் அமல் நீரத் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லென், டொவினோ தாமஸ், சௌபின் சாஹிர், ஷரபுதீன், ஸ்ரீநாத் பாசி, நதியா மொய்து, ஜோதிர்மயி என மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பட்டாளமே இணைந்து நடிக்கின்றனர். குஞ்சாக்கோ போபனின் இந்த தீரஜ் பிரபு லுக் மிகவும் ஸ்டைலிஷான புதிய தோற்றத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. முற்றிலும் மாறுபட்ட கேங்ஸ்டர் மற்றும் ஆக்ஷன் காமெடி பாணியில் உருவாகும் இப்படத்திற்கு தென்னிந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தின் அடுத்தடுத்த கதாபாத்திர அறிமுகங்கள் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த சுவாரசியமான அறிவிப்புகளைத் தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

· Sony Music South

பழைய செய்திகள்