செப்டம்பர் 18 திரைக்கு வரும் 'லா அண்ட் ஆர்டர்': கவுண்ட்டவுன் தொடங்கியது
இயக்குநர் பிரகாஷ் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள விறுவிறுப்பான மலையாள புலனாய்வு திரைப்படம் 'லா அண்ட் ஆர்டர்'. நடிகை அபிராமி, சித்திக், ரஞ்சித் பாலகிருஷ்ணன் மற்றும் ஜானி ஆண்டனி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 18 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படம் திரைக்கு வர இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், படத்திற்கான இறுதிக்கட்ட கவுண்ட்டவுன் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. சத்யம் சினிமாஸ் தயாரிப்பில் ஏபி இன்டர்நேஷனல் வெளியிடும் இந்த படம் சட்ட அமைப்பின் நுணுக்கங்களையும் அதிகார மோதல்களையும் பேசும் ஒரு அழுத்தமான த்ரில்லராக உருவாக்கப்பட்டுள்ளது. உண்மைச் சம்பவங்களின் தாக்கத்துடன் இதன் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அபிராமியின் வலுவான கதாபாத்திரமும் சித்திக்கின் தனித்துவமான நடிப்பும் இப்படத்தின் முக்கிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டு தேதி நெருங்குவதை அடுத்து படத்திற்கான விளம்பரப் பணிகள் முழு வீச்சில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
· Apifilms