தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் கௌரவ உறுப்பினரானார் லெஜெண்ட் சரவணன்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் (SWAN) நிர்வாகிகள் நடிகர் லெஜெண்ட் சரவணனை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போது சங்கத்தின் தலைவர் இயக்குநர் சேரன், பொதுச்செயலாளர் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் இயக்குநர்கள் செல்வபாரதி, நவீன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். சங்க நிர்வாகிகளின் அன்பான வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட லெஜெண்ட் சரவணன், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் கௌரவ உறுப்பினராக முறைப்படி இணைந்தார். திரைக்கதை எழுத்தாளர்களின் நலன் மற்றும் படைப்பு வளர்ச்சிக்காக சங்கத்துடன் இணைந்து பணியாற்ற அவர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். சங்க வளர்ச்சி நிதிக்காக தனது பங்களிப்பை வழங்கவும் அவர் உறுதியளித்துள்ளார். தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் நடைபெற்ற இந்த சந்திப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு சினிமா வட்டாரங்களில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. சங்க நிர்வாகிகள் லெஜெண்ட் சரவணனுக்கு தங்களது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்தனர்.
· Nikil Murukan