பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் காலமானார்: திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல்

பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் காலமானார்: திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல்

அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பேசும் படம் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க திரைப்படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 94. தனது வாழ்நாள் முழுவதையும் திரையுலகிற்கே அர்ப்பணித்த சிங்கீதம் சீனிவாசராவ், கமல் ஹாசனுடன் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மறக்க முடியாத பல கிளாசிக் படங்களை உருவாக்கினார். நகைச்சுவை, மௌன படம், அறிவியல் புனைகதை என எந்த எல்லைகளுக்குள்ளும் அடங்காத அவரது படைப்பாற்றல் இந்திய சினிமா வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தது. தனது 94வது வயதிலும் கூட சிங்கீதம் என்ற படத்தை அதே துடிப்புடன் இயக்கி சினிமா மீதான தனது காதலை வெளிப்படுத்தியவர். அவரது மறைவுச் செய்தி வெளியானதை அடுத்து ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் லட்சக்கணக்கான சினிமா ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்