முன்னாள் முன்னணி இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவு: திரையுலகம் சோகம்
இந்திய சினிமாவின் முன்னோடி இயக்குனர்களில் ஒருவரான சிங்கீதம் சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 94. இந்தத் துயரமான செய்தியை கேயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘பேசும் படம்’, ‘ராஜ பார்வை’ என இந்திய திரையுலகையே வியக்க வைத்த காலத்தால் அழியாத கிளாசிக் படங்களை இயக்கிய பெருமை இவருக்கு உண்டு. சினிமா மீது தீராத காதல் கொண்ட இவர், தனது 94வது வயதிலும் ‘சிங் கீதம்’ என்ற படத்தை அதே இளமைத் துடிப்புடன் இயக்கினார். சினிமாவின் கதை சொல்லும் முறையில் பல்வேறு புதுமைகளைப் புகுத்திய சிங்கீதம் சீனிவாச ராவின் மறைவு ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு இந்திய திரையுலகப் பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
· Actor Kayal Devaraj