லியோ படத்தின் அன்பெனும் மெலடி பாடல் வெளியானது: ஆல்பத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என அனிருத் நெகிழ்ச்சி!

லியோ படத்தின் அன்பெனும் மெலடி பாடல் வெளியானது: ஆல்பத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என அனிருத் நெகிழ்ச்சி!

தளபதி விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவான லியோ திரைப்படத்தின் இனிமையான குடும்ப மெலடி பாடலான 'அன்பெனும்' பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இந்த பாடல் லியோ ஆல்பத்திலேயே தனது மிகவும் விருப்பமான பாடல் என இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். விஷ்ணு எடவன் வரிகளில், லோத்திகா ஜா மற்றும் அனிருத் குரலில் வெளியாகியுள்ள இப்பாடல் விஜய் மற்றும் த்ரிஷாவின் அழகான குடும்பப் பிணைப்பை அழகாக காட்சிப்படுத்தியுள்ளது. கில்லி, திருப்பாச்சிக்குப் பிறகு பல வருடங்கள் கழித்து விஜய், த்ரிஷா ஜோடி இணைந்துள்ள காட்சி ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் அக்டோபர் 19 அன்று வெளியாகவுள்ள லியோ திரைப்படத்தின் இந்த மென்மையான மெலடி பாடல் இணையத்தில் தற்போது ட்ரெண்டிங்கில் முதலிடம் வகிக்கிறது.

· Anirudhofficial

பழைய செய்திகள்