ஐரோப்பாவில் விஜய்யின் பிரம்மாண்ட லியோ: ஃபோர் சீசன் கிரியேஷனுடன் கைகோர்த்த ஹம்சினி

ஐரோப்பாவில் விஜய்யின் பிரம்மாண்ட லியோ: ஃபோர் சீசன் கிரியேஷனுடன் கைகோர்த்த ஹம்சினி

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'லியோ' திரைப்படத்தின் ஐரோப்பிய வெளியீட்டுக்காக, ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஃபோர் சீசன் கிரியேஷன் நிறுவனத்துடன் அதிகாரப்பூர்வமாக கைகோர்த்துள்ளது. நடிகர் விஜய்யின் திரை வரலாற்றிலேயே ஐரோப்பாவில் வெளியாகும் மிகப்பெரிய ரிலீஸாக இது அமையும் என விநியோகஸ்தர்கள் உறுதியளித்துள்ளனர். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி வருகின்றன. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி திரையரங்குகளில் லியோ படத்தை முன்னெப்போதும் இல்லாத அளவில் திரையிட விரிவான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக பிரம்மாண்ட திரையிடல் அமைய உள்ளது.

· Hamsinient

பழைய செய்திகள்