இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாகும் லியோ முதல் பாடல் 'நா ரெடி': லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு!
லியோ திரைப்படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த பாடல் வெளியாவது உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்ட விருந்தாக அமைந்துள்ளது. அனிருத் இசையமைப்பில் விஜய் தனது சொந்தக் குரலில் பாடியுள்ள இப்பாடலின் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். ஏற்கனவே வெளியான சிறிய வீடியோவிலேயே பாடல் வரிகளும் விஜய்யின் துள்ளலான நடன அசைவுகளும் இணையத்தில் புயலை கிளப்பியிருந்ததுடன் பாடலின் மீதான ஆவலையும் தூண்டியிருந்தது. இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாகும் முழு லிரிக்கல் வீடியோவை யூடியூப் மற்றும் இசை ஸ்ட்ரீமிங் தளங்களில் மிகப்பெரிய வரலாற்று சாதனை படைக்க வைக்க ரசிகர்கள் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். திரையரங்குகளில் ரசிகர்களை துள்ளி ஆடவைக்கும் அதிரடி கொண்டாட்ட பாடலாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.
· Dir_lokesh